DD யின் வாழ்வில் நேர்ந்த சோகம்….நெகிழ வைத்த பதிவு…

0
272



தமிழ்நாட்டில் சினிமா நட்சத்திரங்களை போல தொலைக்காட்சி பிரபலங்களுக்கும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருப்பவர் தன் DD என்கிற திவ்யதர்ஷினி.நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்றாலே DD தான் என்று நினைக்கும் வண்ணம் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்றார் DD. தனது அசராத கேள்விகளாலும் சிரித்துக் கொண்டே நிகழ்ச்சி நடத்தும் சுட்டித் தனத்தாலும் இவருக்கென தனி ரசிகர் கூட்டம் உருவாகியது.தொலைக்காட்சி நிகழ்ச்சிகளோடு மட்டுமல்லாமல் “பவர்பாண்டி” போன்ற திரைப்படங்களிலும் தன் நடிப்பு திறனை வெளிப்படுத்தினார். இந்நிலையில் DD அவர்கள் சமூகவலைத்தளம் மூலமாக தன் ரசிகர்களுக்கு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின்படி “எனது இடது காலில் முறிவு ஏற்பட்டு நான் நடக்க முடியாமல் வலியால் தவித்து வந்தேன் அந்த நேரத்தில் என் மீது அளவு கடந்த அன்பு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

மேலும் எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தன் பதிவின் மூலம் நன்றியை தெரிவித்துள்ளார்.

Leave a Reply