85 வயது பாட்டியாக நடிக்கும் காஜல் அகர்வால்

0
63

சென்னை,

நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் வெளியிட்டுள்ளார்

காஜல் அகர்வால்

நடிகை காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்கில் இணைந்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் வெளியிட்டுள்ளார். தமிழில், பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால்

KAJALAGARWAL

தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

மேடம் டுசாட்ஸ்

இதற்கிடையே, சிங்கப்பூர் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் நிறுவப்பட்ட அவரது மெழுகு சிலை கடந்த சில நாட்களுக்கு முன் திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட காஜல் தனது மெழுகு சிலையுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதை அவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். இது வைரலானது.

இந்தியன் 2

இந்நிலையில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்திலும் அவர் நடிக்கிறார். இதில் 85 வயது பாட்டியாக நடிக்கிறார். சங்கர் இயக்கும் இந்தப் படத்தில் ஏற்கனவே ரகுல் பிரீத் சிங், இன்னொரு ஹீரோயினாக நடிக்கிறார். பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்ட பட்ஜெட்டில் படத்தைத் தயாரிக்கிறது.

மேக்கப் அறை

இந்தப் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் தொடங்கியது. இதில் நடிகை காஜல் அகர்வால் நேற்று முன்தினம் கலந்துகொண்டார். சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்துகொண்ட அவர், மேக்கப் அறையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அவர் முகத்தை மறைத்தபடி அந்தப் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார்.

கொன்று விடுவார்கள்

தற்போது, கமல்ஹாசனுடன் அவர் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய காஜல் அகர்வால், இந்தியன் 2 படத்தில் 85 வயதுடைய பெண்ணாக நடிக்கிறேன். இந்த கேரக்டரில் நடிப்பது சவாலானதுதான். இதற்குமேல் படம் பற்றி சொன்னால், படக்குழுவினர் என்னை கொன்று விடுவார்கள் என்று கூறியிருந்தது நினைவுகூரத்தக்கது.

Leave a Reply