70க்கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் வன்கொடுமை… “பொள்ளாச்சி 2.0” திடுக்கிடும் தகவல்கள்!

0
269


கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கணேசபுரத்தைச் சேர்ந்தவர் காசி(26). சென்னையில் உள்ள கல்லூரியில் பிஏ முடித்துள்ள இவருக்கு சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் நட்பு காதலாக மாற “திருமணம் என்றால் உன்னோடுதான்” என்று கூறி காசி அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்துள்ளான். இருவரும் தனிமையில் இருப்பதை தனது செல்போனில் விடியோவாகவும் புகைப்படமாகவும் பதிவு செய்துள்ளான். இதனிடையில் கல்லூரி முடித்து நாகர்கோவில் வந்த காசி, அந்த பெண்மருத்துவரிடம் பணம் கேட்டதாகவும் தரவில்லையென்றால் இருவரும் எடுத்துக்கொண்ட நெருக்கமான புகைப்படங்களை சமூகவலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டியதாகவும் தெரிகிறது.


காசியின் வலையில் சிக்கிக்கொண்ட அப்பெண் வேறு வழியில்லாமல் அவன் கேட்கும்போதெல்லாம் பணம் கொடுத்துள்ளார். நாளுக்கு நாள் காசியின் தொந்தரவு அதிகமாகவே பணம் தருவதை நிறுத்திவிட்டார் அப்பெண்.
இதனால் கோபம் கொண்ட காசி அப்பெண்ணுடன் தான் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பதிவேற்றியதாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த அந்த பெண் மருத்துவர் கன்னியாகுமாரி மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் காசியை கைது செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கூலிங் கிளாஸ், ஜிம் பாடி என சினிமா ஹீரோவைபோல் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வளம் வரச்செய்துள்ளார் காசி. தன் புகைப்பட அழகில் மயங்கி தன்னோடு பழகும் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை தன் கட்டுக்குள் கொண்டு வந்து அவர்களின் அந்தரங்கத்தை படம்பிடிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளான் காசி. “பணம் கொடுக்கவில்லையென்றால் புகைப்படத்தை வெளியிட்டு வாழ்க்கையை சீரழித்து விடுவேண்” என்றும் மிரட்டியுள்ளான்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஹார்ட்டிஸ்க்களில் பள்ளி குழந்தைகள் உட்பட 100க்கும் மேற்பட்ட பெண்களின் விடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply