விடுதி அறையில் செத்துக் கிடந்த பெண் மருத்துவர்… காரணம்??? நெஞ்சை பதறவைக்கும் செயல்…

0
215


இந்த கொரோனா தொற்று சமயத்தில் நமது பாதுகாப்புக்காக நாளுக்கு நாள் அயராது உழைப்பவர்கள் தான் மருத்துவர்கள். ஆனால் அந்த மருத்துவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை என்பதுதான் உண்மை.அந்தவகையில் தற்போது சென்னையைச் சேர்ந்த இளம் பெண் மருத்துவர் ஒருவர் விடுதி அறையில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் கல்லூரி இறுதி ஆண்டு படித்துக்கொண்டு இருப்பவர் தான் பிரதீபா.வெறும் 22 வயதே ஆன இவர் இந்த கொரோனா பரவலின் காரணமாக கல்லூரி விடுதியில் தங்கி இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார்.இந்நிலையில் நேற்று காலை வெகு நேரம் ஆகியும் பிரதீபாவின் அறைக் கதவுகள் திறவாமல் இருந்துள்ளது.

இதனால் அவருடன் தங்கி இருந்த சகமாணவிகள் அங்கிருந்த அதிகாரிகளிடம் முறையிட்டனர்.அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் அறையின் கதவை உடைத்த போது பிரதீபா மயங்கி கிடந்துள்ளார். அங்கு இருந்த மருத்துவர்கள் பிரதீபாவை சோதித்து பார்க்கையில் அவர் ஏற்கனவே இறந்து கிடப்பது தெரியவந்துள்ளது.போலீசார் தீவிரமாக விசாரித்த போதும் பிரதீபாவின் தற்கொலைக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.இதுகுறித்து மேலும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.

Leave a Reply