விசாகப்பட்டினத்தில் விஷம் பரவியது…திட்டமிட்ட செயலா??? எதிர்பாராத விபத்தா???

0
104

நாடு தற்போது இருக்கும் சூழலில் வெளியில் வந்தால் நோய் தாக்கும் என்ற அச்சம் பெருமளவில் மக்களிடையே உள்ளது. இந்நிலையில் வீட்டை விட்டு வெளியில் வந்த மக்கள் விஷ வாயு தாக்கி மயங்கி விழுந்த சம்பவம் விசாகப்பட்டினத்தில் நடந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள பாலிமர் தொழிற்சாலையில் இன்று காலை எதிர்பாராத விதமாக விஷ வாயுக்கசிவு ஏற்பட்டது.

இந்த வாயுக்கசிவு அருகில் உள்ள எல்லா இடங்களுக்கும் மிக வேகமாக பரவியது.காற்றில் பரவிய இந்த நச்சுத்தன்மை வாய்ந்த விஷவாயு இதுவரை 13 பேரை காவு வாங்கியுள்ளது.மேலும் இந்த விஷவாயு பாதிப்பு தொழிற்சாலைக்கு அருகாமையில் வசிக்கும் பலரையும் பாதித்துள்ளது. இந்த விஷவாயு தாக்கியதில் காலையில் வீதியில் உலாவிய பலரும் மயங்கி விழுந்தனர். திடீரென நிகழ்ந்த இந்த விபத்திற்கு மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் மரணித்துள்ளன.இந்த விஷவாயு கசிவிற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

Leave a Reply