வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் மரணம்????

0
217


நாளுக்கு நாள் பல சர்ச்சைகளை கிளப்பி உலக நாடுகளை அச்சுறுத்துபவர் தான் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.தற்போது அவரின் பெயரால் ஒரு சர்ச்சை எழுந்துள்ளது.கிம் ஜாங் உன் உடல்நலக்குறைவால் மரணித்துவிட்டதாக ஒரு சர்ச்சை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வடகொரிய அதிபர் மரணித்து விட்டதாகவும் அதனால் அவரது இறுதி ஊர்வலத்திருக்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும் அமெரிக்கா தனது செயற்கை கோள் புகைப்படங்கள் மூலம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க
அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஒவ்வொன்றும் கிம் உடல்நிலை பற்றி வெவ்வேறு தகவல்களை வெளியிட்டு விவாதத்தைக் கிளப்பியுள்ளனர். கிம் ஜாங் உன் அறுவை சிகிச்சை தோல்வியால் கோமாவில் இருப்பதாகவும், கடற்கரையில் நடைபயிற்சியின் போது மாரடைப்பால் மரணித்ததாகவும் பல விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பற்றிய சரியான தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.கிம் பற்றிய சர்ச்சைக்கு விரைவில் விடை கிடைக்கும் என நம்பலாம்.

Leave a Reply