மீண்டும் வருது ஆப்பு … ஆபாச படம் பார்க்குறவங்க உஷார்!!!

0
380

இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் நாடெங்கும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்த நிலையை கருத்தில் கொண்டு சமீபத்தில் நமது அரசாங்கம் சிறுவர் குறித்த ஆபாச படங்களைப் பார்ப்பதையும் அதை பரப்புவதையும் குற்றமாக அறிவித்து பலரை கைதும் செய்துள்ளது. இந்த கைது நடவடிக்கைகள் தொடர்ந்த போதிலும் சிறுவர்கள் குறித்த ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்த பாடில்லை. மேலும் வாட்ஸாப்
ட்விட்டர் போன்ற இணையதளங்கள் மூலமாக இந்த வகையான ஆபாச படங்கள் அதிகம் பரவுவதாகவும் இவற்றை தடுக்க அந்த நிறுவனங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக வாட்ஸாப், ட்விட்டர் மற்றும் கூகிள் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது.இந்த குற்றச்சாட்டு குறித்து ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

தெரிவித்துள்ளது.இதுமட்டுமில்லாமல் கூகிலில் ஆபாச படங்கள் அதிகம் இருப்பதாகவும் வாட்ஸாப்பில் ஆபாச படங்கள் குறித்த குழுக்கள் அதிகம் இருப்பதாகவும் அதை தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply