“மரண வலி” என்பது என்னனு தெரியனுமா??? இதைப் படிங்க!!!!

0
123

மக்கள் அனைவரும் வீட்டில் இருக்கும் இந்த ஊரடங்கு நேரத்திலும் நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களின் வீடுகளை மறந்து எல்லையில் பணியில் ஈடுபட்டுள்ளனர் ராணுவ வீரர்கள்.மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் ராணுவ வீரர்களின் பாதுகாப்பு மட்டும் உறுதி செய்யப்படாத ஒன்றாகவே உள்ளது.அப்படியாக கடந்த சில தினங்களுக்கு முன்பு காஷ்மீரில் ஹந்தவரா என்னும் இடத்தில் இந்திய ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் 5 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த அந்த 5 வீரர்களுக்கு நாடே இரங்கல் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்த இந்திய மேஜர் அனுஜ் சூட்டின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கின் போது அவரின் மனைவி அக்ரிதி சிங் தன் கணவர் இறந்த துக்கம் தாளாமல் அதிர்ச்சியில் உறைந்தபடி தன் கணவரை கண்ணிமைக்காமல் பார்க்கும் புகைப்படம் பார்ப்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமணமாகி 4 மாதங்களே ஆன நிலையில் நடந்த இந்த துயர சம்பவம் நெஞ்சில் கனத்த வலியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply