பிளாஸ்டிக் பொருளில் 28 நாள் உயிர் வாழும் கொரோனா!!!அதிர்ச்சி தரும் ஆய்வுத் தகவல்கள்…கவனமா இருங்க மக்களே….

0
120

மக்களிடையே காட்டுத்தீயாய் பரவி வரும் இந்த வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள மருத்துவர்கள் பல்வேறு வழிமுறைகளை மக்களுக்கு கற்றுக்கொடுக்கின்றனர். இந்நிலையில் இந்த வைரஸ் கிருமி வெவ்வேறு இடங்களில் எவ்வளவு நேரம் உயிர் வாழும் என்பது குறித்த விரிவான தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.நோய் பாதிக்கப்பட்ட ஒரு நபரின் உமிழ் நீர் மூலமாக பரவும் இந்த வைரஸ் காற்றில் 3 மணி நேரம் வரை உயிர் வாழும்.அந்த 3 மணி நேர காலத்தில் பலருக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கொரோனா பாதித்துள்ள நபரின் மலத்தில் அதிக நேரம் இந்த வைரஸ் உயிர் வாழும். இதனால் நோய் பரவும் அபாயம் அதிகரிக்கும். உலோகங்கள், நெகிழி பொருட்கள் போன்றவற்றில் ஒன்பது நாட்கள் முதல் 28 நாட்கள் வரை உயிர் வாழக்கூடும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இந்த மாதிரியான பொருட்களில் கிருமி நாசினி தெளிப்பதன் மூலம் சில வினாடிகளில் இந்த வைரஸை எளிதில் கொல்ல முடியும். இந்த தகவல்களை அறிந்து மக்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.

Leave a Reply