பள்ளி ஆசிரியர் தற்கொலை!!!நெஞ்சை பதறவைக்கும் இறுதி வார்த்தைகள்….

0
286


இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில் ஆண்களுக்கு இணையாக எல்லா துறைகளிலும் பெண்களும் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். ஆணுக்கு பெண் அடிமை என்ற நிலை மாறி ஆணும் பெண்ணும் சமம் என்ற நிலை உருவாகியுள்ளது. இந்த காலத்திலும் கூட ஆங்காங்கே பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.அந்த வரிசையில் திருமணமான 60 நாட்களே ஆன பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நெஞ்சை உலுக்கியுள்ளது.


திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணி புரிபவர் தான் பத்மபிரியா. இவருக்கும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவலர் ராஜாராம் என்பவரோடு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் திருமணமாகி கணவர் வீட்டுக்குச் சென்ற பத்மபிரியவை ராஜாராம் வீட்டார் வரதட்சணை கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. இதுகுறித்து பத்மபிரியா காவல்துறையிடம் புகார் அளித்தார். காவல்துறைக்கு பயந்து சில காலம் அமைதியாக இருந்தார் ராஜாராம். ஆனால் சில நாட்களுக்கு பின் மீண்டும் வரதட்சணை கேட்டு பத்மபிரியவை தாய் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர் ராஜாராம் குடும்பத்தார். இந்நிலையில் மிகவும் மனமுடைந்த பத்மபிரியா தனது தாய் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மேலும் அவர் தனது சாவுக்கு தன் கணவர் தான் முழு காரணம் என்று கடிதம் ஒன்றும் எழுதி வைத்துள்ளார்.இதனால் போலீசார் பத்மபிரியாவின் கணவர் ராஜாராம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply