பரம்பரை வீட்டைத் தானமாக வழங்கிய எஸ்.பி.பி.
காரணம் தெரியுமா?

0
71

சென்னை,

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நெல்லூரில் இருக்கும் தனது பரம்பரை வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாக அளித்துள்ளார்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்

ஆந்திராவைச் சேர்ந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தியாவின் மிகப் பிரபலமான பாடகர்களில் ஒருவர். பல்வேறு மொழிகளில் கிட்டத்தட்ட 40,000க்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர். ஆந்திர பிரதேச அரசு சார்பில் 25 மாநில விருதுகளும், தமிழகம் மற்றும் கர்நாடக அரசுகளின் பல மாநில விருதுகளையும் பெற்றவர். அதிக திரைப்பட பாடல்கள் பாடியவர் எனும் கின்னஸ் சாதனையும் தன் வசம் வைத்துள்ளார். இவருக்கு இந்திய அரசு சார்பில் பத்ம ஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளும் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது.

நெல்லூர் வீடு

நெல்லூரில் எஸ்.பி.பி.க்குச் சொந்தமான பரம்பரை வீடு ஒன்று திப்பராஜுவாரி என்கிற தெருவில் உள்ளது. சென்னையில் எஸ்.பி.பி. எப்போதோ குடியேறி விட்டதால் அவரது நெல்லூர் வீடு பல காலமாகப் பூட்டியிருந்ததாகவே தெரிகிறது. இதை வாங்குவதற்காகப் பலர் முயன்றாலும் எஸ்.பி.பி. இதை யாருக்கும் விற்கவில்லை என்று கூறப்படுகிறது.காஞ்சி மடம்

இந்த வீட்டைக் காஞ்சி மடத்துக்குத் தானமாகக் கொடுக்கப்போவதாக எஸ்.பி.பி. ஏற்கெனவே அறிவித்திருந்தார். அதை தற்போது செயல்படுத்தியுள்ளார். காஞ்சி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளிடம் தனது வீட்டை ஒப்படைத்த எஸ்.பி.பி. அதில் ஒரு சமஸ்கிருத வேதப் பாடசாலையை ஆரம்பிக்கவே இந்த தானத்தைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குரு மூர்த்தி

இந்த தகவல் குறித்து துக்ளக் ஆசிரியர் குரு மூர்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

எஸ்.பி பாலசுப்ரமணியம் நெல்லூரில் இருக்கும் தனது பூர்வீக வீட்டை காஞ்சி மடத்துக்கு தானமாக அளித்துள்ளார். காஞ்சி ஆச்சார்யா ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி முன்னிலையில் அவர் பாடிக்கொண்டிருக்கிறார், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் தெரிந்ததும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் ரசிகர்கள் பலர் இதை பாராட்டியுள்ளனர். தொண்டு செய்வது நல்ல விசயம் வாழ்த்துக்கள் என்பது போல கமெண்ட்டு செய்து வருகின்றனர்.

Leave a Reply