பணிக்கு செல்லும் வழியில் நடந்த அதிர்ச்சி நிகழ்வு!!!அயராது உழைத்தவருக்கு நடந்த துயரம்…

0
101

தற்போது இருக்கும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தன் உயிரையும் கூட பொருட்படுத்தாமல் ஓய்வின்றி உழைத்து வருகின்றனர் காவலர்கள்.இந்த ஊரடங்கின் போது பெண் காவலர் ஒருவருக்கு நேர்ந்த துயர சம்பவம் அனைவரையும் சோகத்தில் மூழ்கச் செய்துள்ளது.தென்காசி மாவட்டத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் தான் பவித்ரா.பவித்ரா சென்னை ஆயுதப்படையில் பணி செய்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த மே 5ஆம் தேதி தனது வாகனத்தில் பணிக்குச் சென்று கொண்டிருந்தார்.பணிக்கு செல்லும் வழியில் திடீரென எதிர்பாராத விதமாக எதிரில் வந்த லாரி இவர் மீது மோதியது.

விபத்தைப் பார்த்த பொதுமக்கள் பவித்ராவின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக செல்லும் வழியிலேயே பவித்ராவின் உயிர் பிரிந்தது.

விபத்தில் உயிரிழந்த காவலர் பவித்ராவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Leave a Reply