த்ரிஷாவுடன் டேட்டிங் செய்ய வேண்டுமா?? இதை மட்டும் செய்யுங்க!!!

0
523


தமிழ் திரையுலகில் பிஸியாக இருந்த நடிகர்கள் பலரும் இந்த ஊரடங்கின் காரணமாக வீட்டில் வெட்டியாய் பொழுதைக் கழிக்கின்றனர். அந்த வகையில் நடிகை த்ரிஷா தன் ரசிகர்களுக்கு இந்த ஊரடங்கில் இன்ப அதிர்ச்சி ஒன்றை அளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்கள் பலருடன் கதாநாயகியாக நடித்தவர் தான் நடிகை த்ரிஷா. தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு இணையாக நடிப்பை வெளிப்படுத்தி இன்றும் தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வளம் வருகிறார் த்ரிஷா.

இந்நிலையில் த்ரிஷா தனது ரசிகர்களுக்கு இணையத்தளம் மூலமாக போட்டி ஒன்றை அறிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட பதிவின்படி தன்னுடன் டேட்டிங் செய்ய விரும்பும் ரசிகர்கள் தன்னைப் பற்றியும் தன்னுடன் எப்படியெல்லாம் நேரத்தை செலவழிக்கலாம் என்பது பற்றியும் 500வார்த்தைகளில் கட்டுரை எழுத வேண்டுமாம். அதில் வெற்றி பெறுபவர்களுடன் தான் டேட்டிங் செய்யப் போவதாக த்ரிஷா தன் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார்.

Leave a Reply