திரௌபதி இயக்குனரின் காட்டமான பதிவு….அப்புடி என்னதான் ஆச்சு…

0
81


தமிழகத்தில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மே 7ஆம் தேதி மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.ஒவ்வொரு வயதினருக்கும் ஒவ்வொரு நேரம் என கட்டுப்பாடுகளுடன் மதுபானக் கடை திறக்கப்பட்டது. 40 நாட்களுக்கு மேல் குடியை விட்டிருந்த குடிமகன்கள் பலரும் கடை திறந்ததும் இயல்பு நிலைகுத் திரும்பினர்.இந்நிலையில் குடித்துவிட்டு குடிமகன்கள் செய்யும் அட்டூழியத்தை பலரும் படம் பிடித்து முகநூலில் பதிவிடுகின்றனர்.

மதுக்கடைகள் திறப்பதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் திரௌபதி படத்தின் இயக்குனரான மோகன் ஜி அவர்கள் மதுப்பிரியர்கள் மதுக்கடையின் முன்னாள் வரிசையில் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு “பாவம்……பசியால் வாடும் ஏழைகள்” என எழுதியிருந்தார். மேலும் குடித்துவிட்டு ரோட்டில் கிடக்கும் ஒருவரை பார்த்து அவரின் மகள் அழுகும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு “இந்த கேவலமான அனுபவம் எனக்கும் பலமுறை நடந்துள்ளது. இந்த கேவலமான குடியை நான் எப்போதும் எதிர்ப்பேன்” என்று வருத்தத்துடன் பதிவிட்டிருந்தார்.

Leave a Reply