தாயார் இறந்த சோகம்… வீடியோ காலில் இறுதி சடங்கு…

0
360

தாயார் இறந்த சோகம்… வீடியோ காலில் இறுதி சடங்கு…


144 அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மக்கள் தினம்தோறும் பல்வேறு துயரங்களைச் சந்தித்து வருகின்றனர். அந்தவகையில் ராணுவவீரர் ஒருவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த தன் தாயின் இறுதிச்சடங்கினை வீடியோ கால் மூலமாக பார்த்த சம்பவம் அனைவரையும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. சேலம் மாவட்டம் மேச்சேரியைச் சேர்ந்தவர் சக்திவேல் ராணுவவீரரான இவர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

சக்திவேலின் குடும்பம் சொந்த ஊரான மேச்சேரியில் வசித்து வருகிறது. இந்நிலையில் சக்திவேலின் தாயார் உடல்நலக்குறைவால் நேற்று காலை மரணமடைந்தார். தாயார் மரணமடைந்த செய்தி சக்திவேலிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு அமலில் உள்ள சூழ்நிலையில் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் போனதால் தாயின் இறுதி சடங்குக்கு வரமுடியாத நிலை ஏற்பட்டது. வேறு வழி இல்லாமல் வீடியோ கால் மூலம் தாயின் இறுதி சடங்கை பார்த்தார் சக்திவேல்.இறந்த தாயின் உடலைக் கண்ட சக்திவேல் கதறி அழுத சம்பவம் காண்பவர் மனதை உலுக்கியது.

Leave a Reply