டாக்டரை காதலித்த வேன் ஓட்டுநர்…காதலிச்சா குற்றமா??? இறுதியில் என்ன நடந்தது தெரியுமா???

0
91


காலம் எவ்வளவு மாறினாலும் மக்கள் எவ்வளவு படிப்பறிவு பெற்றாலும் அன்றிலிருந்து இன்று வரை காதல் என்றால் எதிர்ப்பு தெரிவிக்கும் பெற்றோர் தான் இங்கு அதிகம் உள்ளனர்.திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியைச் சேர்ந்த திமுக பிரமுகர் தான் ராதா புலிகேசி. இவரின் மகளான காருண்யா, மருத்துவ படிப்பின் இறுதி ஆண்டில் படித்து வருகிறார். இவருக்கு இதே பகுதியைச் சேர்ந்த வேன் ஓட்டுநரான வீரமணி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் 5 வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்தது. இவர்கள் காதலுக்கு காருண்யா வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்த நிலையில் காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி சமயபுரத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டனர்.திருமணமான இருவரும் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.காவல் நிலையத்துக்கு வந்த காருண்யாவின் பெற்றோர் அவரை தங்களோடு அழைத்துச் செல்ல முயற்சித்தனர். ஆனால் தன் காதலில் சற்றும் மாறாத காருண்யா தன் கணவர் வீரமணி உடன் செல்வதாக போலீசாரிடம் கூறினார்.இதனால் காருண்யாவை அவரின் கணவர் வீரமணியுடன் அனுப்பிவைத்தனர் காவல்துறையினர்.

Leave a Reply