செத்தாலும் திரும்பி வருவேன்!!!குணமடைந்தவரைத் தாக்கும் கொரோனா….

0
159

சாதாரணமாக ஒருவருக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்தால் அந்த நோய் மீண்டும் வராது என்று பெரும்பான்மையாக நம்பப்படுகிறது.ஆனால் தற்போது பரவி வரும் கோவிட் 19 நோய் தொற்று அதிர்ச்சி தரும் வேறொரு தகவலை நமக்குத் தருகிறது.ஜப்பானைச் சேர்ந்த நபருக்கு நோய் தொற்று ஏற்பட்டது.மருத்துவர்கள் அளித்த சிகிச்சைக்குப் பின்னர் அவர் குணமடைந்து வீடு திரும்பினார்.நல்ல வேலையாக நாம் நோயின் பிடியிலிருந்து தப்பித்துவிட்டோம் என்று அவர் நினைத்துக்கொண்டிருந்த வேலையில் மீண்டும் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது.மருத்துவமனைக்குச் சென்ற அவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் மீண்டும் கொரோனா தொற்று உறுதியானது.

இதனால் கொரோனா பாதித்த ஒருவருக்கு மீண்டும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.ஆனால் இதுகுறித்து மருத்துவர்களிடம் கேட்டபோது “எந்த ஒரு நோயும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கும் இதன் மூலம் நோயாளி நோயிலிருந்து விடுபடுவார்.ஆனால் அவர் உடலில் இருக்கும் கிருமிகள் முழுவதுமாக அழியாமல் 3 மாதங்கள் வரை அவை பாதிக்கப்பட்டவரின் உடம்பில் ஒளிந்திருக்கும்.ஒருசிலருக்கு உடம்பில் உண்டான நோய் எதிர்ப்பு திறன் வலுவாக இல்லாமல் போய்விடுகிறது.இப்படி நோய் எதிர்ப்பாற்றல் குறையும் போது ஏற்கனவே நம் உடம்பில் ஒளிந்திருக்கும் வைரஸ் மீண்டும் உயிர்பெறத் துவங்குகிறது.இதனால் தான் இரண்டாவது முறையாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது” என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதனால் நோயிலிருந்து முழுமையாக விடுபட நமக்கு நோய் குணமடைந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.

Leave a Reply