கொரோனா குறித்து இனிமே அச்சம் வேண்டாம்….

0
240

கொரோனா நோய் தொற்று மனிதர்களிடையே எப்படி பரவுகிறது என நமக்குத் தெளிவான பல தகவல்கள் தெரியும். ஆனால் இந்த வைரஸ் நமது உடலில் நோயாக எப்படி உருவெடுக்கும் என்ற தகவல்கள் தற்போது தான் வெளியாகின்றன. இந்த நோய் தொற்று முதலில் ஒருவரின் கைகளின் மூலம் மூக்கு மற்றும் வாய் பகுதியை நெருங்குகிறது. வாய் வழியாக தொண்டை பகுதிக்கு சென்று சேரும் இந்த வைரஸ் அங்கு பெரியளவில் உற்பத்தி ஆகிறது. சுவாச மண்டலத்தில் இது பல மடங்காக பெருகுகிறது. இந்த நோய் தொற்று யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படக்கூடும் ஆனால் பத்தில் இரண்டு பேருக்கு மட்டுமே பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்.இந்த நோய் பாதித்த பெரும்பான்மை மக்களுக்கு சிறிய அளவிலான சளி இருமல் தொல்லை மட்டுமே ஏற்படும் ஒருசிலருக்கு அந்த அறிகுறிகளும் இருக்காது.இப்படி லேசாக பாதிப்பு ஏற்பட்டுள்ள நோயாளிகளுக்கு சாதாரண பழவகைகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது.

இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி அவர்கள் நோயிலிருந்து விடுபடுவர்.ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள ஒருசிலருக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும் அவர்களை நோயிலிருந்து பாதுகாக்கும் வழிகள் இதுவரையில் கண்டறியப்படவில்லை.எனவே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வழிகளில் மக்கள் ஈடுபட்டால் நோயிலிருந்து தப்பிக்கலாம்.

Leave a Reply