கொரோனவை திட்டமிட்டு பரப்பியது சீனா??? ஆதாரங்களுடன் டொனால்ட் டிரம்ப்….

0
171


உலகம் முழுவதும் வேகமாக பரவிவரும் இந்த கொரோனா தொற்றுக்கு சீனாவின் திட்டமிட்ட சதியே காரணம் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.கொரோனா பரவலின் காரணமாக அமெரிக்கா பல்லாயிரக்கணக்கான மக்களை இழந்துள்ளது.மேலும் இந்த ஊரடங்கினால் அமெரிக்காவுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.இதெற்கெல்லாம் காரணம் சீனாவின் அலட்சியம் தான் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் “கொரோனா வைரஸ் ஒரு சீன ஆய்வகத்தில் தோன்றியுள்ளது என்று நான் நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.மேலும் இதற்கான தகுந்த ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் ஆனால் அதை வெளியிட தனக்கு அனுமதி இல்லை எனவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டை சீனா முழுவதுமாக மறுத்துள்ளது. இதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே பெரும் பனிப்போர் நிலவி வருகிறது.

Leave a Reply