ஒரு கிலோ கோதுமையின் விலை…. 15000???…. ஆ ஆ ஆ !!!!!!

0
154

ஒரு கிலோ கோதுமையின் விலை…. 15000???…. ஆ ஆ ஆ !!!!!!


கொரோனா தொற்று அச்சத்தால் மக்கள் தங்கள் வீடுகளில் முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பு செய்துள்ளது. இந்நிலையில் மக்களின் அன்றாட தேவைக்கு கூட பணம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களுக்கு அரசு பல நிவாரணங்களை வழங்கினாலும் அது போதுமானதாக இல்லாத காரணத்தால் பல்வேறு பிரபலங்களும் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.

அந்தவகையில் பாலிவுட் நடிகரான அமீர்கான் செய்த உதவி அனைவரின் பாராட்டை பெற்றுள்ளது. நடிகர் அமீர்கான் சார்பாக 1 கிலோ கோதுமை கொண்ட பை ஒன்று மக்களுக்கு வழங்கப்பட்டது. இதையறிந்த பலரும் அமீர்கானை “வெறும் கோதுமை மட்டும் கொடுப்பதா” என விமர்சித்தனர். ஆனால் கோதுமை பையை பிரித்த பின் தான் அமீர்கானின் சாமர்த்தியம் வெளிப்பட்டது. ஒவ்வொரு கோதுமை பையின் உள்ளும் 15000 ரூபாய் ரொக்கம் வைக்கப்பட்டிருந்தது. வசதி படைத்தவன் வெறும் 1 கிலோ கோதுமையை வரிசையில் நின்று வாங்க மாட்டான், இல்லாதவர் மட்டுமே 1கிலோ கோதுமைக்காக வரிசையில் நிற்பர் என்ற அவரின் சிந்தனை பாராட்டுதலுக்குரியது.

Leave a Reply