என்னடா பண்ணி வச்சிருக்கீங்க!!!!அதுக்குள்ள 70 லட்சம் பெண்கள் கர்ப்பமா!!!

0
219

தற்போது பரவிவரும் கொரோனா தொற்றால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். நோயினால் சிலரும் இந்த நோயைத் தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளினால் பலரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். அந்த வகையில் இந்த ஊரடங்கினால் மேலும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக 70 லட்சம் பெண்கள் புதிதாய் கர்ப்பம் அடையும் சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் இதனால் பெண்கள் பெரிதும் பாதிப்படைவர் என்றும் இந்த நிலை குறித்து ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு விரிவான தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்த அமைப்பு அளித்த தகவலின்படி உலகம் முழுவதும் உள்ள 4 கோடிக்கும் அதிகமான பெண்களால் இந்த ஊரடங்கினால் கருத்தடை சாதனங்களை பயன்படுத்த முடியவில்லை.

இதனால் புதிதாய் கர்ப்பம் தரிக்கும் பெண்களின் எண்ணிக்கை 70 லட்சத்தைத் தாண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இதனால் பெண்கள் உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்படுவர் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.மேலும் இன்னும் பத்து ஆண்டுகளில் 1 கோடிக்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடக்கும் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இதனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் வரும் காலங்களில் அதிகரிக்கும் என்றும் ஐநா மக்கள் நிதியம் தெரிவித்துள்ளது.

Leave a Reply