உயிருடன் புதைக்கப்பட்ட தாய்…..3ஆம் நாள் உயிர்த்தெழுந்த சம்பவம்…

0
280

குழந்தை பிறந்ததிலிருந்து அதன் வாழ்க்கைக்காக தன் எல்லா ஆசைகளையும் மறந்து பிள்ளைகளுக்காக உழைப்பவர்கள் தான் பெற்றோர்கள். ஆனால் அப்படிப்பட்ட பெற்றோரின் இறுதி காலத்தில் அவர்களை கவனித்துக் கொள்ளாமல் கைவிடும் பிள்ளைகள் தான் இங்கு அதிகம் உள்ளனர். சீனாவில் பெற்ற மகனே தன் வயதான தாயயை உயிருடன் புதைத்த சம்பவம் நடந்தேறியுள்ளது.

சீனாவில் “ஷாங்” என்ற பெண் போலீசாரிடம் தனது மாமியாரை சில நாட்களாக காணவில்லை எனப் புகாரளித்தார்.மேலும் இந்த விஷயத்தில் தனது கணவரான “மா” மீது சந்தேகம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்தப் பெண்ணின் கணவரை கைது செய்து விசாரித்தனர்.இந்த விசாரணையின் முடிவில் “மா” தனது தாயை 3 நாட்களுக்கு முன்பு உயிருடன் புதைத்தது தெரியவந்தது. உடனே போலீசார் அந்த இடத்தை தோண்டினர். அப்போது ஒரு பெண் முனங்கும் சத்தம் கேட்டது. முழுவதுமாக தோண்டிய பின் “மா” வின் தாயார் உயிரோடு இருப்பது தெரிந்தது. 3 நாட்களாக உணவின்றி நீரின்றி சுவாசிக்க முடியாமல் கூட அந்த தாய் உயிரோடு இருந்துள்ளார். இந்த சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

Leave a Reply