இப்படியெல்லாம் துன்பம் வருமா…இளம்பெண் வாழ்வில் நடந்த துயரம்…

0
189

ஊரடங்கின் காரணமாக போதிய பொருளாதார வசதிகள் இல்லாமல் பலரும் தவித்து வருகின்றனர்.இந்த நெருக்கடி காலத்தில் பிறப்பு இறப்பு செலவுக்குக் கூட பணம் இல்லாமல் மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு துயர சம்பவம் ஒன்று நேர்ந்துள்ளது.

கோவையைச் சேர்ந்தவர் அஞ்சலிதேவி இவருக்கு 3 குழந்தைகள். இவரது கணவரான முனீஸ்வரன் எதிர்பாராத விதமாக நெஞ்சுவலியால் மரணமடைந்தார்.இந்நிலையில் கணவரை அடக்கம் செய்ய கணவரின் சொந்த ஊரான மதுரைக்கு வந்த அஞ்சலி தேவியால் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் கோவைக்கு திரும்ப முடியவில்லை.

அதனால் தன் கணவரின் தங்கையின் வீட்டில் தங்கியுள்ளார். ஆனால் அங்கும் வறுமை தலைவிரித்து ஆடியது.அதனால் மூன்று வேலை சாப்பாட்டுக்கு வழியில்லாமல் தவித்து வந்துள்ளார் அஞ்சலி தேவி.இதனை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் அஞ்சலி தேவியை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றுள்ளார். இவரின் நிலையை உணர்ந்த ஆட்சியர் இவருக்கு போதிய உதவிகளை செய்து அஞ்சலி தேவியின் சொந்த ஊருக்கு அவரை அனுப்பி வைத்துள்ளார்.

Leave a Reply