இப்படியெல்லாமா திருமணம் நடத்துவீங்க!!!! தினுசு தினுசா யோசிக்கிறாங்கப்பா…

0
281


இந்த லாக்டவுன் சமயத்தில் நாடெங்கும் பல சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்துள்ளன. அந்தவகையில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு வீடியோ கால் மூலம் திருமணம் நடந்தது அனைவரின் கவனத்தை ஈர்த்தது. கேரள மாவட்டம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். வங்கி அதிகாரியான இவருக்கு ஆலப்புழா பகுதியைச் சேர்ந்த அஞ்சனா என்பவருடன் நிச்சியதார்தம் கடந்த நவம்பர் மாதம் நடந்தது. இவர்களுக்கு திருமணம் ஏப்ரல் 26 ஆம் தேதி நிச்சயிக்கப்பட்டது. இந்த ஊரடங்கின் காரணமாக நிலைமை தலைகீழாக மாறியதால் லக்னோவில் பணி புரிந்து வரும் மணப்பெண் அஞ்சனாவால் சொந்த ஊருக்கு திரும்ப முடியவில்லை. இருந்தபோதிலும் திருமணத்தை நிச்சயிக்கப்பட்ட தேதியில் நடத்த திட்டமிட்ட இந்த இன்டர்நெட் ஜோடி அதற்கு வாட்ஸாப்பை கருவியாக பயன்படுத்தினர். அதன்படி கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி இருவரும் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டனர்.

மணமகன் ஸ்ரீஜித் மணக்கோலத்தில் அமர்ந்தபடி தனது போனுக்கு தாலி கட்ட அதை பார்த்த அஞ்சனா மணமகன் தனக்கு தாலி காட்டுவதாக எண்ணி தனக்குத் தானே தாலியை கட்டிக்கொண்டார். வாட்ஸாப்பில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இணையவாசிகள் லைக்குகளால் அட்சதை தூவினர்.

Leave a Reply