இன்னும் கொரோனவே முடியல அதுக்குள்ள அடுத்த ஆப்பா!!!!

0
159

உலகெங்கிலும் கொரோனா தொற்றால் மக்கள் கொத்து கொத்தாய் மரணித்து வருகின்றனர். இந்த நோய் பரவலை தடுப்பதற்காக மருத்துவர்களும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க ஆராய்ச்சியாளர்களும் பெரும் பாடு பட்டு வருகின்றனர். இந்நிலையில் பூமியை நோக்கி பெரிய விண்கல் ஒன்று வருவதாகவும் அது பூமியின் மீது மோதி பெரும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் கடந்த மாதம் தகவல்கள் வெளியாகி மக்களை மேலும் பயத்தில் உறையச்செய்தது.நான்கு கிலோமீட்டர் நீலம் கொண்ட அந்த விண்கல் பூமியை தாக்கினால் பெரும் சேதங்கள் ஏற்படக்கூடும் .இந்த விண்கல் புவி வட்டப் பாதையை நெருங்காமல் சென்று விடும் என்று நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இருந்தபோதிலும் மக்களுக்கு இந்த விண்கல் குறித்த அச்சம் குறையவில்லை.இந்த விண்கல்லை திசை திருப்ப விஞ்ஞானிகள் முயற்சித்தனர்.இந்நிலையில் அதிர்ஷ்டவசமாக இந்த விண்கல் பூமியை நெருங்காமல் சென்று விட்டது. இந்த விண்கல் பூமியில் மோதாமல் சென்றதால் பூமிக்கு வர இருந்த பேராபத்து தடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply