இதுவரை காணாத நிலவு….அறிய புகைப்படம்….


0
139


பூமியில் இருந்து 3,84,400கி.மீ தொலைவில் உள்ளது நிலவு.நிலவு பற்றிய ஆராய்ச்சி பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. நிலவிற்கு மனிதனை அனுப்பும் முயற்சி, நிலவில் தண்ணீர் குறித்த ஆய்வு என நிலவு பற்றிய ஆராய்ச்சிகள் பலவாறு நடந்து வருகிறது. இந்நிலையில் நிலவின் பல்வேறு புகைப்படங்கள் செயற்கைகோள் மூலம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த புகைப்படங்கள் அனைத்தும் நிலவின் பக்கவாட்டு பகுதியை மட்டுமே காட்டுகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞரான ஆண்ட்ரூ மெக்கர்த்தி பூமியில் இருந்தபடியே நிலவை மிகத்துல்லியமாக படம் பிடித்துள்ளார்.அந்த புகைப்படத்தில் நிலவின் சமவெளிகள் முதல் பள்ளத்தாக்கு வரை அனைத்தும் தெளிவாகத் தெரிகிறது.

அவர் எடுத்த இந்த புகைப்படமே இதுவரை எடுக்கப்பட்ட புகைப்படங்களில் துல்லியமானதாகும்.அவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கின்றனர்.

Leave a Reply