இடிந்து விழுந்தது காசியின் சாம்ராஜ்யம்….. வீட்டை இடிக்க மாநகராட்சி முடிவு….

0
216

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடந்திருக்கும் கன்னியாகுமாரியைச் சேர்ந்த காசி சம்பவமும் இதனை நமக்கு எடுத்துக்காட்டியது.சமூக வளைதளம் மூலமாக பல பெண்களிடம் பழகி அவர்களின் அந்தரங்கத்தை வீடியோ எடுத்து மிரட்டி அவர்களிடம் பணம் பறிப்பதையே வேலையாக கொண்டுள்ளான் காசி.சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காசியை கைது செய்து போலீசார் விசாரணையை தொடங்கினர்.விசாரணையில் பல அதிரவைக்கும் தகவல்கள் வெளியாகின.காசியிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப்பில் பல பெண்களின் விடியோக்கள் இருந்துள்ளது.மேலும் அந்த பெண்களிடம் மிரட்டி வாங்கிய பணத்தில் காசி நான்கு மாடி வீடு ஒன்றை கட்டியுள்ளது தெரியவந்தது.மேலும் அந்த வீடு மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டுள்ளதால் அதனை இடிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.மேலும் காசி மீது குண்டர் சட்டத்தில் வழக்கு பதிவு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.இந்த நடவடிக்கைகளால் மக்களுக்கு காவல்துறை மீது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply