ஆஸ்கர் 2020 – விருது வென்றவர்கள் பெயர் பட்டியல்

0
47

லாஸ் ஏஞ்சல்ஸ்,

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் விருது வென்றவர்கள் குறித்த பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சினிமாதுறையில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2019-ம் ஆண்டுக்கான விழா துவங்கியது. விழாவின் முதல் நிகழ்ச்சியாக ரெட்கார்பட் நிகழ்ச்சி துவங்கியது. விழாவில் திரைப்பட நடிகர்கள் நடிகைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

உலகமே உற்று நோக்கிய 92-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இதில் பல்வேறு பிரிவுகளில் விருதுகளை வென்றவர்கள் விவரம் வெளியாகி உள்ளது.



ஆஸ்கர் விருதை வென்ற படங்கள், கலைஞர்கள் குறித்த முழுவிவரம் வருமாறு:

சிறந்த படம் – பாராசைட்

சிறந்த இயக்குநர் – போங் ஜூன் ஹோ (பாராசைட்)

சிறந்த நடிகர் – ஜாக்குயின் பீனிக்ஸ் (ஜோக்கர்)

சிறந்த நடிகை – ரெனீ ஜெல்வேகர் (ரூடி)

சிறந்த ஆவணப்படம் – அமெரிக்கன் பேக்டரி

சிறந்த வெளிநாட்டு படம் – பாராசைட் (கொரியன்)

சிறந்த அனிமேஷன் திரைப்படம் – டாய் ஸ்டோரி-4
சிறந்த அனிமேஷன் குறும்படம் – ஹேர் லவ்

சிறந்த ஆவண குறும்படம் – லேர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் ஏ வார்ஜோன்

சிறந்த லைவ் ஆக்சன் குறும்படம் – தி நெய்பர்ஸ் விண்டோ

சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் – குய்லூம் ரோச்செரோன், கிரெக் பட்லர் மற்றும் டொமினிக் டுஹோய் (1917)

சிறந்த ஒளிப்பதிவாளர் – ரோஜர் டீக்கின்ஸ் (1917)

சிறந்த படத்தொகுப்பாளர் – மைக்கேல் மெக்கஸ்கர் மற்றும் ஆண்ட்ரூ பக்லேண்ட் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

சிறந்த திரைக்கதை – போங் ஜூன் ஹோ, ஹான் ஜின் வான் (பாராசைட்)

தழுவல் திரைக்கதை – டைகா வெயிட்டி (ஜோஜோ ராபிட்)

சிறந்த பின்னணி இசை – ஹில்தூர் குனாடாட்டிர் (ஜோக்கர்)

சிறந்த பாடல் – லவ் மீ அகெய்ன் (ராக்கெட் மேன்)
சிறந்த துணை நடிகர் – பிராட் பிட் (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த துணை நடிகை – லாரா டெர்ன் (மேரேஜ் ஸ்டோரி)

சிறந்த ஒப்பனை – கசு ஹிரோ, அன்னே மோர்கன் மற்றும் விவியன் பேக்கர் (பாம்ஷெல்)

ஆடை வடிவமைப்பு – ஜாக்லின் டூரான் (லிட்டின் வுமன்)

தயாரிப்பு வடிவமைப்பு – பார்பரா லிங் மற்றும் நான்சி ஹை (ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்)

சிறந்த ஒலி படத்தொகுப்பு – டொனால்டு சில்வஸ்டர் (ஃபோர்டு வெர்சஸ் ஃபெராரி)

ஒலி கோர்ப்பு – மார்க் டெய்லர் (1917)

கடந்த ஆண்டை போலவே இந்தாண்டும் தொகுப்பாளர்கள் இல்லாமல் விழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply