ஆபாசமா பேசாதீங்க!!!பெண்களை கேவலமாக வர்ணித்த பிரபல இயக்குனர்…

0
87

சமீபகாலமாகவே பெண்கள் குறித்த சர்ச்சை கருத்து தெரிவிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகியுள்ளது.திரைத்துறையைச் சார்ந்தவர்கள் இந்த மாதிரியான கருத்துக்களை தெரிவிக்கும் போது அது பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகும். அந்தவகையில் தெலுங்கு பட இயக்குனர் ஒருவர் பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்து தெரிவித்து ரசிகர்களிடம் சிக்கியுள்ளார்.

தெலுங்கு இந்தி ஆகிய மொழிகளில் பல வெற்றிப் படங்களை இயக்கியவர் தான் ராம் கோபால் வர்மா. இவர் இயக்கிய திரைப்படங்களை விட இவர் வெளியிடும் சர்ச்சை கருத்துக்கள் அதிகம் பிரபலமடையும்.சில காலம் முன்பு நடிகை ஸ்ரீ ரெட்டி இயக்குனர் ராம் கோபால் வர்மா என்னை வெளியில் அழைத்துச் சென்றார் என்று குற்றம் சாட்டினார்.அதற்கு ராம் கோபால் வர்மா “நான் பெண்களுடன் வெளியில் போக மாட்டேன் உள்ளே தான் போவேன்” என்று சர்ச்சை கருத்தை தெரிவித்தார்.இப்படி சர்ச்சைக்குரிய கருத்துக்களால் பிரபலமடைந்த இயக்குனர் ராம் கோபால் வர்மா தற்போது புதிய சர்ச்சை ஒன்றை கிளப்பியுள்ளார்.

இரு பெண்கள் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு அதில் “மனிதனால் உருவாக்கப்பட்ட நகை முன் சீட்டில் உள்ளது இறைவனால் உருவாக்கப்பட்ட நகை பின் சீட்டில் உள்ளது” என எழுதியுள்ளார். அவரின் இந்த பதிவு பலரின் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர் ஒருவர் “உங்கள் பெண்ணை இப்படித்தான் வர்ணிப்பீர்களா??? ” என கோபமாக கேட்டுள்ளார்.

Leave a Reply