ஆன்லைனில் சேட்டை செய்த “Fake ID”… அடுச்சு தூக்கிய காவல்துறை…

0
149

ஆன்லைனில் சேட்டை செய்த “Fake ID”… அடுச்சு தூக்கிய காவல்துறை…


சமீபகாலமாகவே ஆன்லைனில் முகம் தெரியாத போலி கணக்குகளின் மூலம் பெண்களை இழிவு படுத்தும் செயல் சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. அப்படியான இழிசெயலால் துயரத்துக்கு ஆளாகியுள்ளனர் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 15 இளம் பெண்கள். இன்ஸ்டாகிராம் எனப்படும் சமூக வலை தளம் மூலம் இவர்களது புகைப்படங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

முகம் தெரியாத ஒருவரின் கணக்கிலிருந்து “இவர்கள் விபச்சாரம் செய்கிறார்கள்” என்று பதிவிட்டபடி அந்த 15 பெண்களின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.போலீசார் விசாரணையை தொடங்கிய மூன்றே நாட்களில் குற்றவாளியை கைது செய்தனர்.போலீஸ் விசாரணையில் சம்பந்தப்பட்ட அந்த நபர் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 19 வயது மஜ்னாஸ் என்றும் அவருக்கு மேலும் 5 போலி கணக்குகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.இவர், சம்பந்தப்பட்ட அந்த 15 பெண்களை தவறாக சித்தரித்ததற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இணையத்தின் வாயிலாக நடைபெறும் இதுபோன்ற குற்ற செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு தான் இருக்கின்றன. எனவே இணைய வாசிகள் பாதுகாப்புடன் செயல்படுவது நல்லது….

Leave a Reply