ஆண்களின் இச்சைக்கு பயன்படுத்தப்படும் அடிமைகள் தான் பெண்கள்… அமலா பால் சர்ச்சை கருத்து…

0
861

சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர் நடிகை அமலா பால். தனது படத்தின் இயக்குனரான திரு A L விஜயை திருமணம் செய்து கொண்ட இவர் சிறிது காலத்திலேயே அவருடன் விவாகரத்து பெற்றுக்கொண்டார். இப்போது தனியாக வாழ்ந்து வரும் இவர் சர்ச்சைக்குரிய பல கருத்துக்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். அந்தவகையில் ஓஷோ எழுதிய “தி புக் ஆப் வுமன்” என்ற புத்தகத்தில் உள்ள சில கருத்துக்களை தனது இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில் அவர் “பெண்கள் ஆண்களுக்கு அடிமைகளாகவே வாழ்கின்றனர் பெண் வலியை சுமந்து குழந்தையை பெறுகிறாள் ஆனால் ஆண் அந்த வலியை சிறிதும் பொருட்படுத்தாமல் அவர்களை அடுத்த பிரசவத்திற்கு தயார் செய்கிறான்.இதை பார்க்கையில் பெண் என்பவள் மனிதர்களை உருவாக்கும் தொழிற்சாலை போல் தெரிகிறது.பெண் என்பவள் ஆணின் பாலியல் இச்சைக்கு பயன்படுத்தப்படும் பொருள் என்று ஆண்கள் கருதுகின்றனர்.

பெண்ணடிமைத்தனம் இன்னும் உள்ளது” என்று அவர் தெரிவித்திருந்தார்.சர்ச்சையை கிளப்பிய இந்த பதிவை பலரும் எதிர்த்து பதிவிட்டுள்ளனர்.

Leave a Reply